ஹாக்கி

ஆக்கி: இந்தியன் வங்கி அணி வெற்றி + "||" + Hockey: Indian bank team wins

ஆக்கி: இந்தியன் வங்கி அணி வெற்றி

ஆக்கி: இந்தியன் வங்கி அணி வெற்றி
ஆக்கி லீக் சாம்பியன் போட்டியில், இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றது.


சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி ஆதரவுடன் ‘சூப்பர் சிக்ஸ்’ ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 6-4 என்ற கோல் கணக்கில் மத்திய கலால் வரி அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-சாய் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.