உலக கோப்பை ஆக்கி: ஸ்பெயினை போராடி வென்றது அர்ஜென்டினா


உலக கோப்பை ஆக்கி: ஸ்பெயினை போராடி வென்றது அர்ஜென்டினா
x
தினத்தந்தி 29 Nov 2018 9:30 PM GMT (Updated: 29 Nov 2018 8:45 PM GMT)

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை போராடி வீழ்த்தியது. ஒரு கட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை நீடித்த நிலையில், 49-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் கோன்சலோ பெய்லாட் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. பதில் கோல் திருப்ப ஸ்பெயின் அணி கடைசி 4 நிமிடங்களில் கோல் கீப்பரை வெளியேற்றி விட்டு, கூடுதலாக ஒரு வீரரை களம் இறக்கியும் பலன் கிட்டவில்லை. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை சாய்த்தது.

‘பி’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-அயர்லாந்து (மாலை 5 மணி), இங்கிலாந்து-சீனா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story