ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி + "||" + World Cup hockey: Australian team wins

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி
உலக கோப்பை ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றிபெற்றது.
புவனேஸ்வரம்,

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள அயர்லாந்தை எதிர்கொண்டது. வலுவான ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எளிதில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக விளங்கியது. ஆஸ்திரேலிய அணி 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் ஒன்றை மட்டுமே கோலாக மாற்றியது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை போராடி வென்றது. ஆஸ்திரேலிய அணியில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் கோவெர்ஸ் 11-வது நிமிடத்திலும், டிம் பிரான்ட் 34-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அயர்லாந்து அணி தரப்பில் ஷேன் ஒடோனோக் 13-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, அறிமுக அணியான சீனாவுடன் தடுமாறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து அணியில் மார்க் கிளச்சோர்னி 14-வது நிமிடத்திலும், லியாம் அன்செல் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீனா அணி தரப்பில் ஜியாபிங் 5-வது நிமிடத்திலும், டலாக் டு 59-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

இன்றைய லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து-மலேசியா (மாலை 5 மணி), ஜெர்மனி-பாகிஸ்தான் (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் - மார்ஷ் சகோதரர்கள் நீக்கம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் சகோதரர்கள் நீக்கப்பட்டனர்.
2. உலக கோப்பை ஆக்கியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து - மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது பெல்ஜியம்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதியில் நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 6-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.
3. உலக கோப்பை ஆக்கி அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜியம் மோதல்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து, இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
4. உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
5. உலக கோப்பை ஆக்கி : அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
உலக கோப்பை ஆக்கி போட்டியில், அர்ஜென்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி.

ஆசிரியரின் தேர்வுகள்...