ஹாக்கி

உலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி + "||" + The Netherlands team easily won the Hockey World Cup

உலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி

உலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றி
உலக கோப்பை ஆக்கியில் நெதர்லாந்து அணி எளிதில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் போராடி தோல்வியடைந்தது.
புவனேஸ்வரம்.

உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணி 7-0 என்ற கோல் கணக்கில் 12-வது இடத்தில் உள்ள மலேசியாவை எளிதில் தோற்கடித்தது. நெதர்லாந்து அணியில் ஹெர்ட்ஸ்பெர்ஜெர் 11-வது, 29-வது, 60-வது நிமிடங்களில் கோல் அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நெதர்லாந்து அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்து ஆதிக்கம் செலுத்தியது. அதனை சமாளிக்க முடியாமல் மலேசியா தடுமாறியது.


மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானை போராடி வீழ்த்தியது. ஜெர்மனி அணியில் மார்கோ மில்ட்காவ் 36-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.