ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் ‘டிரா’ + "||" + Hockey World Cup: India-Belgium match 'draw'

உலக கோப்பை ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் ‘டிரா’

உலக கோப்பை ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் ஆட்டம் ‘டிரா’
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
புவனேஸ்வரம்,

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 3-ம் நிலை அணியான பெல்ஜியத்தை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி தாக்குதல் பாணியை கையாண்டது. முதல் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணாக்கிய பெல்ஜியம் 3-வது வாய்ப்பை (8-வது நிமிடம்) கோலாக்கியது. இந்த கோலை ஹென்ட்ரிக்ஸ் அடித்தார். உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துக்கு இடையே இந்திய வீரர்கள் பதில் கோல் திருப்ப வரிந்து கட்டினர். 15-வது நிமிடத்தில் கிடைத்த பொன்னான வாய்ப்பை மன்தீப்சிங் கோட்டை விட்டார். முதல் பாதியில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கியது.


பிற்பாதியில் இந்திய வீரர்களின் கை சற்று ஓங்கியது. 39-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை இந்தியாவின் ஹர்மன்பிரீத்சிங் எளிதில் கோலாக்கினார். தொடர்ந்து 47-வது நிமிடத்தில் எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி உள்வட்டத்திற்குள் நுழைந்த இந்திய வீரர் கோத்தாஜித் சிங், வலை அருகில் நின்ற சக வீரர் சிம்ரன்ஜீத் நோக்கி பந்தை லாவகமாக தட்டிவிட்டார். அவர் அதை அப்படியே கோலுக்குள் திருப்பினார். ஆனால் இந்த மகிழ்ச்சி இந்தியாவுக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 56-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் சிமோன் கோக்னர்ட் கோல் போட்டு பதிலடி கொடுத்தார்.

இதையடுத்து பரபரப்பான இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ‘சி’ பிரிவில் இவ்விரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென்ஆப்பிரிக்காவையும், பெல்ஜியம் அணி, கனடாவையும் தோற்கடித்து இருந்தது.

இந்திய அணி தனது கடைசி லீக்கில் கனடாவை வருகிற 8-ந்தேதி சந்திக்கிறது. இதில் இந்திய அணி அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக கால்இறுதி சுற்றை எட்ட முடியும். முன்னதாக இதே பிரிவில் நடந்த கனடா-தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டமும் டிரா (1-1) ஆனது.

‘ஏ’ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டங்களில் ஸ்பெயின்- பிரான்ஸ் (மாலை 5 மணி), நியூசிலாந்து-அர்ஜென்டினா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. குல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்
குல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
2. குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
3. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
4. தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
5. வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா
இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.