ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் ஆஸ்திரேலியா + "||" + World Cup Hockey Australia in quarter final

உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் ஆஸ்திரேலியா

உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் ஆஸ்திரேலியா
16 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

16 அணிகள் பங்கேற்றுள்ள உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3–0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பதம் பார்த்தது. ஜேக்கப் ஒயிட்டான் (47–வது நிமிடம்), பிளாக் கோவர்ஸ் (50–வது நிமிடம்), கோரி வியேர் (56–வது நிமிடம்) ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் கோல் போட்டனர். இதே பிரிவில் நடந்த சீனா–அயர்லாந்து அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தொடக்க லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இருந்த ஆஸ்திரேலிய அணி 2–வது வெற்றியுடன் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தது. டி பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனி–நெதர்லாந்து (மாலை 5 மணி), மலேசியா–பாகிஸ்தான் (இரவு 7 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.
2. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.
3. பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.
4. உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.
5. ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.