ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை + "||" + World Cup Hockey Australian Team Goal rain

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை

உலக கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலிய அணி கோல் மழை
புவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக அணியான சீனாவை எதிர்கொண்டது.

புவனேஸ்வரம்,

புவனேஸ்வரத்தில் நடந்து வரும் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான ஆஸ்திரேலியா, அறிமுக அணியான சீனாவை எதிர்கொண்டது. இதில் கோல் மழை பொழிந்த ஆஸ்திரேலிய அணி 11–0 என்ற கோல் கணக்கில் சீனாவை எளிதில் தோற்கடித்து 3–வது வெற்றியுடன் தனது பிரிவில் பிரிவில் முதலிடத்தை (9 புள்ளிகள்) பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணியில் பிளாக் கோவெர்ஸ் 3 கோல்கள் அடித்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7–வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 10–வது இடத்தில் இருக்கும் அயர்லாந்துடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4–2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. ‘பி’ பிரிவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து அணி 2–வது இடத்தையும், 2 டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சீனா அணி 3–வது இடத்தையும் பிடித்து கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கின்றன. ஒரு டிரா, 2 தோல்வியுடன் ஒரு புள்ளி மட்டும் பெற்ற அயர்லாந்து அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.