ஹாக்கி

உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது + "||" + Hockey World Cup 2018 India lose 1 2 to the Netherlands in quarterfinals

உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது

உலக கோப்பை ஆக்கி 2018: காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது
2018 உலக கோப்பை ஆக்கி காலிறுதியில் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.

புவவேஷ்வர், 


14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற கடைசி கால்இறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை எதிர்க்கொண்டது. இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தது.  உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி நெதர்லாந்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் இரு அணிகளும் 6 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் நெதர்லாந்து அணி 5 முறை வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய மோசமான நிலையை மாற்றி உள்ளூரில் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பெரிதும் இருந்தது. நெதர்லாந்து அணியின் எத்தகைய சவாலையும் சமாளிக்க ஆயத்தமாக இருக்கிறோம் என்று இந்திய அணியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்தை காட்டியது. 1-1 என்ற கணக்கில் இருந்த போது தடுப்பு ஆட்டத்தில் நெதர்லாந்து ஆதிக்கம் செலுத்தியது. பின்னர் 2-1 என்று முன்னிலைப் பெற்று போட்டியை தன்வசப்படுத்தியது. அரையிறுதிக்கு முன்னேறியது. 

 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்புடன் விளையாட்டு தொடங்கியது. ஆனால் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
2. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் எல்லையில் குவிப்பு
இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் அணிகள் இன்று மோத உள்ளன.
4. ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகள்: மத்திய அரசு திட்டம்
ரூ.21,040 கோடி செலவில் இந்திய-சீன எல்லையில் 44 சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. இந்திய அணிக்கு 289 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை சேர்த்துள்ளது.