ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை + "||" + National Hockey Competition: Jammu and Kashmir team more goals

தேசிய ஆக்கி போட்டி: ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை

தேசிய ஆக்கி போட்டி: ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை
தேசிய ஆக்கி போட்டியில், ஜம்மு-காஷ்மீர் அணி கோல் மழை பொழிந்து அசத்தியது.
சென்னை,

ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் எழும்பூரில் நடந்த லீக் ஆட்டங்களில் மத்தியபிரதேச ஆக்கி அகாடமி அணி 10-1 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவையும், மராட்டிய அணி 10-0 என்ற கோல் கணக்கில் பீகாரையும், ஜார்கண்ட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மணிப்பூரையும் தோற்கடித்தன. மற்றொரு ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணி 12-0 என்ற கோல் கணக்கில் கோல் மழை பொழிந்து அந்தமான் நிகோபர் அணியை பந்தாடியது. அந்த அணி கேப்டன் கரன்ஜித்சிங் ‘ஹாட்ரிக்’ உள்பட 8 கோல்கள் அடித்து அசத்தினார்.


ஐ.சி.எப்.பில் நடந்த லீக் ஆட்டங்களில் மத்திய தலைமை செயலக அணி 2-0 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தையும், குஜராத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மிசோரமையும் வீழ்த்தின.