ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி + "||" + National Hockey Competition: Tamilnadu team started with victory

தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி

தேசிய ஆக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
தேசிய ஆக்கியின் முதலாவது லீக் ஆட்டத்தை, தமிழக அணி வெற்றியுடன் தொடங்கியது.
சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 41 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஜி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணியுடன் (சி.ஐ.எஸ்.எப்.) மோதியது. தமிழக அணியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் ஸ்ரீஜேஷ் ஆடவில்லை.


செந்தில் தலைமையில் களம் கண்ட தமிழக அணி துடிப்புடன் விளையாடியது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டாலும், பிற்பகுதியில் தமிழக அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை திணித்தது. முடிவில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் ஜோஷ்வா (7-வது நிமிடம்), ராயர் வினோத் (34-வது நிமிடம்), செல்வராஜ் (45-வது நிமிடம்), மணிகண்டன் (58-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் அசாம் அணியை ஐ.சி.எப். மைதானத்தில் நாளை காலை 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
2. புரோ கபடி: அரியானாவிடம் வீழ்ந்தது பெங்களூரு புல்ஸ்
புரோ கபடி போட்டியில், பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரியானா அணி வெற்றிபெற்றது.
3. திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றி - வாக்காளர்களுக்கு மோடி நன்றி
திரிபுராவில் பா.ஜனதா அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
4. புரோ கபடி: பெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை
புரோ கபடி போட்டியில், பெங்களூருவிடம் மும்பை அணி வீழ்ந்தது.
5. புரோ கபடி: புனேயை வீழ்த்தியது மும்பை
புரோ கபடி போட்டியில், மும்பை அணி புனேயை வீழ்த்தியது.