ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: மத்தியபிரதேச அணி 3-வது வெற்றி + "||" + National Hockey Competition madhya pradesh team 3rd win

தேசிய ஆக்கி போட்டி: மத்தியபிரதேச அணி 3-வது வெற்றி

தேசிய ஆக்கி போட்டி: மத்தியபிரதேச அணி 3-வது வெற்றி
9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது.
சென்னை,

இதில் 4-வது நாளான நேற்று எழும்பூரில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மத்தியபிரதேச ஆக்கி அகாடமி அணி 5-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் தெலுங்கானா அணி 6-2 கோல் கணக்கில் பீகாரையும், சாஸ்த்ரா சீமா பால் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்டையும், மணிப்பூர் அணி 5-1 என்ற கணக்கில் ஜம்மு-காஷ்மீரையும் தோற்கடித்தன.

ஐ.சி.எப். மைதானத்தில் நடந்த ஆட்டங்களில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரிய துறைமுகங்கள் அணியையும், சத்தீஷ்கார் 17-1 என்ற கோல் கணக்கில் திரிபுராவையும், பாட்டியாலா அணி 5-4 என்ற கோல் கணக்கில் பெங்காலையும் வீழ்த்தின.