ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி + "||" + National Hockey Tournament: Tamilnadu team win 2nd

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி

தேசிய ஆக்கி போட்டி: தமிழக அணி 2-வது வெற்றி
தேசிய ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றிபெற்றது.
சென்னை,

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று ஐ.சி.எப். மைதானத்தில் நடந்த ‘ஜி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணி கோல் மழை பொழிந்து 13-1 என்ற கணக்கில் அசாமை ஊதித்தள்ளியது. தமிழக அணிக்கு இது 2-வது வெற்றியாகும். தமிழக அணியில் ராயர் 3 கோலும், தாமு, செல்வராஜ், மணிகண்டன், ஜோஷ்வா தலா 2 கோலும், நவீன்குமார், அஜய் தலா ஒரு கோலும் அடித்தனர். நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, புதுச்சேரியை எதிர்கொள்கிறது. மற்ற ஆட்டங்களில் சி.ஐ.எஸ்.எப். 6-1 என்ற கோல் கணக்கில் இமாசலபிரதேசத்தையும், கூர்க் அணி 10-1 என்ற கோல் கணக்கில் கோவன்ஸ் அணியையும், சாய் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்டீல் பிளான்ட் அணியையும், அகில இந்திய போலீஸ் அணி 9-1 என்ற கோல் கணக்கில் மத்திய பாரத் அணியையும் தோற்கடித்தன.


எழும்பூரில் நடந்த ஆட்டங்களில் மராட்டியம் 5-3 என்ற கோல் கணக்கில் தெலுங்கானாவையும், மணிப்பூர் அணி 19-0 என்ற கோல் கணக்கில் அந்தமானையும் வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி தோல்வி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி தோல்வியடைந்தது.
2. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
3. தேசிய கூடைப்பந்து: தமிழக அணி வெற்றி
தேசிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணி வெற்றிபெற்றது.