ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி + "||" + National Hockey Competition: Bengaluru team qualifies for quarter-final

தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி

தேசிய ஆக்கி போட்டி: பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதி
தேசிய ஆக்கி போட்டியில், பெங்களூரு அணி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

சென்னை, 

9-வது தேசிய சீனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மராட்டிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தனது பிரிவில் முதலிடம் பிடித்த அந்த அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பெங்களூரு அணி 8-2 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை பந்தாடியது. அந்த பிரிவில் பெங்களூரு, சத்தீஷ்கார் அணிகள் தலா 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெங்களூரு அணி கால்இறுதிக்குள் நுழைந்தது. சத்தீஷ்கார் அணி கால்இறுதி வாய்ப்பை இழந்தது. சாஸ்த்ரா சீமா பால் (பி பிரிவு), மத்திய தலைமை செயலகம் (சி பிரிவு) ஆகிய அணிகளும் அடுத்த சுற்றை உறுதி செய்தன. ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் புதுச்சேரியை இன்று சந்திக்கிறது. இந்த ஆட்டம் எழும்பூரில் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.