ஹாக்கி

அகில இந்திய தபால் துறை ஆக்கி: தமிழக அணி 2-வது வெற்றி + "||" + All India Post Department Hockey: Tamilnadu team win 2nd

அகில இந்திய தபால் துறை ஆக்கி: தமிழக அணி 2-வது வெற்றி

அகில இந்திய தபால் துறை ஆக்கி: தமிழக அணி 2-வது வெற்றி
அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றியைபெற்றது.
சென்னை,

தமிழ்நாடு தபால் துறை சார்பில் 32-வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் மத்திய பிரதேசம்-ஒடிசா அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மத்திய பிரதேச அணி 11-2 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக அணி 7-1 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசத்தை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது. தமிழக அணியில் சுதர்சன் 2 கோலும், டெல்லி கணேஷ், பிரகாஷ், கமலகண்ணன், ஜெயப்பிரகாஷ், ஆல்பர்ட் ஜான் தலா ஒரு கோலும் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் உத்தரபிரதேசம்-பஞ்சாப் (பகல் 1.30 மணி), கர்நாடகா-ஒடிசா (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.