ஹாக்கி

தபால் துறை ஆக்கி: கர்நாடக அணி ‘சாம்பியன்’ + "||" + Postal Department Hockey: Karnataka team 'champion'

தபால் துறை ஆக்கி: கர்நாடக அணி ‘சாம்பியன்’

தபால் துறை ஆக்கி: கர்நாடக அணி ‘சாம்பியன்’
32–வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை, 

32–வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கர்நாடகா–மத்தியபிரதேசம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 4–4 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கர்நாடக அணி 5–3 என்ற கோல் கணக்கில் (மொத்தத்தில் 9–7) மத்தியபிரதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 6–2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை சாய்த்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் முன்னிலை வகித்தார். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஷ்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். இந்திய ஆக்கி அணியின் முன்னாள் முகமது ரியாஸ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி
ஆண்களுக்கான 9–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நேற்று தொடங்கியது.
2. 41 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் 7–ந் தேதி தொடங்குகிறது
ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9–வது தேசிய ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வருகிற 7–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது.
3. உலக கோப்பை ஆக்கி: ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ஜெர்மனி கால்இறுதிக்கு முன்னேற்றம்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஜெர்மனி அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் கால்இறுதிக்கு முன்னேறியது.
4. உலக கோப்பை ஆக்கியில் கால்இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி கனடாவுடன் இன்று மோதல்
உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை சந்திக்கிறது.
5. உலக கோப்பை ஆக்கி: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது, பிரான்ஸ்
16 அணிகள் இடையிலான 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை