ஹாக்கி

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி + "||" + National Junior Hockey: Tamilnadu team win

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி
ஆண்களுக்கான 9–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நேற்று தொடங்கியது.

அவுரங்கபாத், 

ஆண்களுக்கான 9–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் லீக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை சந்தித்தது. பரபரப்பான இந்த மோதலில் தமிழக அணி 5–4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தியது. தமிழக அணியில் எஸ்.கார்த்தி (6, 10, 35, 50–வது நிமிடம்) 4 கோலும், கே.திராஸ் (51–வது நிமிடம்) ஒரு கோலும் போட்டனர். ‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 7–1 என்ற கணக்கில் உள்ளூர் அணியான மராட்டியத்தை பந்தாடியது. உத்தரபிரதேச வீரர் கோபிகுமார் சோங்கர் 5 கோல்கள் அடித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.
2. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.
3. பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.
4. உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.
5. ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.