ஹாக்கி

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் ஆட்டம் ‘டிரா’ + "||" + National Junior Hockey: Tamil Nadu-Himachal Pradesh match 'draw'

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் ஆட்டம் ‘டிரா’

தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் ஆட்டம் ‘டிரா’
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
அவுரங்கபாத்,

ஆண்களுக்கான 9-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, நேற்று நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் இமாச்சலபிரதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழக அணியில் கார்த்தி 44-வது நிமிடத்திலும், மாரீஸ்வரன் 48-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இமாச்சலபிரதேச அணி தரப்பில் சரன்ஜீத் சிங் 57-வது நிமிடத்திலும், அமித் 59-வது நிமிடத்திலும் கோல் திருப்பினார்கள். மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்டை சாய்த்தது. இன்னொரு ஆட்டத்தில் மணிப்பூர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணிக்கு 2-வது வெற்றி
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-டெல்லி ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது.
3. ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மத்திய பிரதேசம் ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் டிரா ஆனது. கடைசி நாளில் தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் சதம் அடித்தார்.
4. து ளி க ள்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நத்தத்தில் நடந்து வருகிறது.
5. பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சித்து சர்ச்சைக்குரிய பேச்சு - பாரதீய ஜனதா கண்டனம்
பாகிஸ்தானுடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சித்துவுக்கு, பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.