ஹாக்கி

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி + "||" + State Hockey: The Sai Team wins the opening match

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி
மாநில ஆக்கி போட்டியின், தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றிபெற்றது.
சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் சாய்-ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதின.


இதில் சாய் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலக அணியை வீழ்த்தியது. சாய் அணியில் யுவராஜ் 13-வது நிமிடத்திலும், சரவணகுமார் 17-வது நிமிடத்திலும், சண்முகவேல் 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஏ.ஜி.அலுவலக அணி தரப்பில் சண்முகம் 50-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபால் துறை-தமிழ்நாடு போலீஸ் (காலை 7 மணி), சென்னை மாநகர போலீஸ்-ஆக்கி அகாடமி (பிற்பகல் 2.30 மணி), ஆயுதப்படை போலீஸ்-வருமான வரி (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் சுங்க இலாகா அணி வெற்றி
அகில இந்திய கைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், சுங்க இலாகா அணி வெற்றிபெற்றது.
2. மாநில ஆக்கி: ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதி
மாநில ஆக்கி போட்டியில் ஐ.சி.எப். அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.
3. மாநில ஆக்கி: இந்தியன் வங்கி அணி அபாரம்
மாநில ஆக்கி போட்டியில், இந்தியன் வங்கி அணி அபார வெற்றிபெற்றது.
4. மாநில ஆக்கி சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றி
மாநில ஆக்கி போட்டியில், சென்னை மாநகர போலீஸ் அணி வெற்றிபெற்றது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த மாதம் 23-ந்தேதி சென்னையில் மோதுகின்றன.