ஹாக்கி

மாநில ஆக்கி: இந்தியன் வங்கி அணி அபாரம் + "||" + State Hockey: The Indian bank team win

மாநில ஆக்கி: இந்தியன் வங்கி அணி அபாரம்

மாநில ஆக்கி: இந்தியன் வங்கி அணி அபாரம்
மாநில ஆக்கி போட்டியில், இந்தியன் வங்கி அணி அபார வெற்றிபெற்றது.
சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. ரெயில்வே அணியில் நம்பி கணேஷ் (2 கோல்), வர்மா ஆகியோர் கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை வென்றது. புனித், வினோதன், ராஜா, லிகித், ஸ்டாலின் அபிலாஷ் ஆகியோர் இந்தியன் வங்கி அணியில் கோல் அடித்தனர். இன்றைய ஆட்டங்களில் ஐ.சி.எப்.- வருமானவரி (பிற்பகல் 2.30 மணி), ஐ.ஓ.பி.-சாய் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.