ஹாக்கி

மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி. + "||" + The state Hockey Final match Indian Bank-IOB

மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி.

மாநில ஆக்கி இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி.
இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 5–வது நாளான நேற்று நடந்த முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.)–ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 4–3 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐ.ஓ.பி. அணியில் அமர்தீப் எக்கா (26–வது, 38–வது நிமிடம்) 2 கோலும், செல்வராஜ் (12–வது நிமிடம்), பிட்டப்பா (55–வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். ஐ.சி.எப். அணியில் அஸ்வின் குஜூர் (36–வது, 48–வது நிமிடம்) 2 கோலும், சுரஜ் மின்ஸ் (42–வது நிமிடம்) ஒரு கோலும் திருப்பினார்கள். மற்றொரு அரைஇறுதியில் இந்தியன் வங்கி அணி 3–0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்தியன் வங்கி அணியில் ராஜா 2 கோலும், லிகித் ஒரு கோலும் அடித்தனர்.

இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியன் வங்கி–ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப்.–தெற்கு ரெயில்வே (பிற்பகல் 3.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
2. மாநில ஆக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’
இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
3. தேசிய ஜூனியர் ஆக்கி: தமிழக அணி வெற்றி
ஆண்களுக்கான 9–வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி (ஏ டிவிசன்) மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில் நேற்று தொடங்கியது.
4. தபால் துறை ஆக்கி: கர்நாடக அணி ‘சாம்பியன்’
32–வது அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.
5. 41 அணிகள் பங்கேற்கும் தேசிய ஆக்கி போட்டி சென்னையில் 7–ந் தேதி தொடங்குகிறது
ஆக்கி இந்தியா அமைப்பின் தமிழ்நாடு பிரிவு சார்பில் 9–வது தேசிய ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வருகிற 7–ந் தேதி முதல் 20–ந் தேதி வரை நடக்கிறது.