ஹாக்கி

மாநில ஆக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’ + "||" + The state Hockey Indian Overseas Bank Team 'Champion'

மாநில ஆக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’

மாநில ஆக்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி ‘சாம்பியன்’
இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை,

இந்தியன் வங்கி சார்பில் 3–வது மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. 12 அணிகள் களம் இறங்கிய இந்த போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி–இந்தியன் வங்கி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முதல் 9 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்ற இந்தியன் வங்கி அணி அதன் பிறகு சரிவை சந்தித்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியில் முத்துசெல்வன், ஹர்மன்பிரீத் சிங், வினோத் ராயர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியன் வங்கி அணி தரப்பில் வினோதன், ஸ்டாலின் அபிலாஷ் தலா ஒரு கோல் அடித்தனர். முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 2–0 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை தோற்கடித்தது. ஐ.சி.எப். அணியில் ஆனந்த் குஜூர், தீபக் தலா ஒரு கோல் அடித்தனர். பரிசளிப்பு விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார். இந்தியன் வங்கி ஸ்போர்ட்ஸ் கமிட்டி தலைவர் எம்.நாகராஜன், செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.