ஹாக்கி

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு + "||" + Aslan Shah Cup Hockey Indian team announcement

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இந்திய அணி அறிவிப்பு
அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி

28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் வருகிற 23–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மலேசியா, கனடா, கொரியா, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக முன்கள வீரர்கள் சுனில், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், லலித் உபாத்யாய், பின்கள வீரர்கள் ரூபிந்தர் பால்சிங், ஹர்மன்பிரீத் சிங், நடுகள வீரர் சிங்லென்சனா சிங் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

இந்திய ஆக்கி அணி வீரர்கள்

இது குறித்து ஆக்கி இந்தியாவின் உயர் திறன் இயக்குனர் ஜான் கருத்து தெரிவிக்கையில், ‘அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் பலர் விளையாட முடியாமல் போனது எதிர்பாராததாகும். ஒடிசாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆக்கி சம்மேளன சீரிஸ் இறுதி போட்டிக்கு முன்பு காயம் அடைந்த வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியை எட்டுவது முக்கியமானதாகும். காயம் அடைந்த வீரர்கள் பெங்களூருவில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்கள். அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் திறமை படைத்தவர்கள்’ என்று தெரிவித்தார்.

அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணி வருமாறு:–

கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், ஸ்ரீஜேஷ், பின்களம்: குரிந்தர் சிங், சுரேந்தர் குமார் (துணை கேப்டன்), வருண்குமார், பிரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ், கோதாஜித் சிங், நடுகளம்: ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, சுமித், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங் (கேப்டன்), முன்களம்: மன்தீப்சிங், சிம்ரன்ஜித் சிங், குர்ஜந்த் சிங், ஷிலானந்த் லக்ரா, சுமித் குமார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடந்து வருகிறது.
2. பெண்கள் ஜூனியர் ஆக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
4 அணிகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.
3. உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.
4. ஆக்கி தொடர்: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா
ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
5. தென்கொரியா போட்டி தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
இந்திய பெண்கள் ஆக்கி அணி வருகிற 20–ந் தேதி முதல் தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.