ஹாக்கி

அஸ்லான் ஷா ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி + "||" + Azlan Shah Hocky In the opening match Indian team win

அஸ்லான் ஷா ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

அஸ்லான் ஷா ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நேற்று தொடங்கியது.
இபோக்,

இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானுடன் மல்லுகட்டியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீரர் வருண்குமார் கோல் அடித்தார். 55-வது நிமிடத்தில் கேப்டன் மன்பிரீத் சிங் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் சிம்ரன்ஜீத் சிங் கோலாக்கினார். ஜப்பான் அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று தென்கொரியாவை (பகல் 1.35 மணி) சந்திக்கிறது.