அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-கொரியா ஆட்டம் ‘டிரா’


அஸ்லான் ஷா ஆக்கி: இந்தியா-கொரியா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 24 March 2019 11:19 PM GMT (Updated: 24 March 2019 11:19 PM GMT)

6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது.

இபோக்,

தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் தென்கொரியாவுடன் மோதியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோட்டை விட்ட இந்திய அணி 28-வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோலை அனுபவம் வாய்ந்த வீரரான மன்தீப்சிங் அடித்தார்.

கொரியாவின் பல முயற்சிகளை இந்திய வீரர்கள் முறியடித்த நிலையில் 52-வது நிமிடத்தில் மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய கொரியா ஆட்ட நிறைவடைய வெறும் 22 வினாடி மட்டுமே இருந்த போது கோல் போட்டு தோல்வியின் பிடியில் இருந்து தப்பியது.

இந்திய தடுப்பாட்டத்தில் நிகழ்ந்த தவறு மூலம் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கொரியாவின் ஜோங்யுன் ஜங் கோலாக மாற்றினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் மலேசியாவை நாளை சந்திக்கிறது.

Next Story