அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 March 2019 9:45 PM GMT (Updated: 27 March 2019 7:32 PM GMT)

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது.

இபோக், 

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7–3 என்ற கோல் கணக்கில் கனடாவை ஊதி தள்ளியது. இந்திய அணியில் வருண்குமார் 12–வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 20–வது, 27–வது, 29–வது நிமிடங்களிலும், அமித் ரோஹிதாஸ் 39–வது நிமிடத்திலும், விவேக் பிரசாத் 55–வது நிமிடத்திலும், நீலகண்ட ‌ஷர்மா 58–வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள். 4–வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை போலந்தை (பகல் 1.35 மணி) சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. 4–வது ஆட்டத்தில் விளையாடிய தென்கொரியா அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளை தனதாக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Next Story