அகில இந்திய துறைமுக ஆக்கி கொல்கத்தா அணி ‘சாம்பியன்’


அகில இந்திய துறைமுக ஆக்கி கொல்கத்தா அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 29 March 2019 9:00 PM GMT (Updated: 29 March 2019 8:29 PM GMT)

பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான 40–வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது.

சென்னை, 

பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான 40–வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் கொல்கத்தா துறைமுக அணி 3–0 என்ற கோல் கணக்கில் பர்திப் (ஒடிசா) துறைமுக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மும்பை துறைமுக அணி 3–0 என்ற கோல் கணக்கில் சென்னை துறைமுகத்தை சாய்த்தது. பரிசளிப்பு விழாவில் சென்னை துறைமுக பொறுப்பு கழக சேர்மன் பி.ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.


Next Story