ஹாக்கி

அஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி + "||" + Azlan Shaw Hockey at the final The Indian team failed

அஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

அஸ்லான் ஷா ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி
6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இபோக், 

6 அணிகள் இடையிலான 28–வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா–தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்திய அணி சார்பில் சிம்ரன்ஜீத் சிங் 9–வது நிமிடத்தில் பீல்டு கோல் அடித்தார். தென்கொரியா அணி தரப்பில் ஜங் ஜோங் ஹியூன் 47–வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தென்கொரியா அணி 4–2 என்ற கோல் கணக்கில் (5–3) இந்தியாவை வீழ்த்தி 3–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 5 முறை சாம்பியான இந்திய அணி 2010–ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பட்டம் வெல்லவில்லை என்ற சோகம் தொடருகிறது. முன்னதாக நடந்த 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா அணி 4–2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.