தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


தென் மண்டல ஆக்கி: வருமான வரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 30 April 2019 10:30 PM GMT (Updated: 30 April 2019 9:09 PM GMT)

தென் மண்டல ஆக்கி போட்டியில், வருமான வரி அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சென்னை,

செயின்ட் பால்ஸ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் சார்பில் தென் மண்டல ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் டையஸ் (பெங்களூரு) அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டையஸ் அணியில் வசந்த், குமார் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியன் வங்கி அணி தரப்பில் ஸ்டாலின் அபிலாஷ் ஒரு கோல் திருப்பினார். மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் ஜி.எஸ்.டி.-வருமான வரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் வருமான வரி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜி.எஸ்.டி. அணியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் டையஸ்-வருமான வரி அணிகள் சந்திக்கின்றன. முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடக்கும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியன் வங்கி-ஜி.எஸ்.டி. அணிகள் மோதுகின்றன.


Next Story