ஹாக்கி

ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு + "||" + Australian Series: Announcement of Indian Hockey Team

ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணி, வருகிற 10-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட போட்டித் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் 2 ஆட்டத்திலும், ஆஸ்திரேலிய ‘ஏ’ மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் தலா ஒரு ஆட்டத்திலும் இந்திய அணி மோதுகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த வீரரான ரூபிந்தர் பால்சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிக்கு பிறகு காயத்தால் இடம் பெறாமல் இருந்தார். அறிமுக வீரராக ஜஸ்கரன் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார். நடுகள வீரர் மன்பிரீத் சிங் கேப்டனாகவும், சுரேந்தர்குமார் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


ஆஸ்திரேலிய தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணி வருமாறு:-

கோல் கீப்பர்கள்: கிரிஷன் பதாக், ஸ்ரீஜேஷ், பின்களம்: ரூபிந்தர் பால்சிங், சுரேந்தர்குமார், ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, குரிந்தர் சிங், கோதாஜித் சிங், நடுகளம்: ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், ஜஸ்கரன் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட ஷர்மா, முன்களம்: மன்தீப்சிங், குர்சாஹிப்ஜித் சிங், ஆகாஷ்தீப் சிங், சுமித் குமார் ஜூனியர், அர்மான் குரேஷி.