ஹாக்கி

ஆக்கி தொடர்:ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி + "||" + Australian team defeat India

ஆக்கி தொடர்:ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி

ஆக்கி தொடர்:ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி
இந்திய ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
பெர்த்,

பெர்த்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியில் பிளாக் கோவர்ஸ் 15-வது, 60-வது நிமிடங்களிலும், ஜெர்மி ஹாய்வார்ட் 20-வது, 59-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். இந்திய அணி கடைசி வரை போராடியும் கோல் எதுவும் அடிக்க முடிய வில்லை. முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி முதல் தோல்வி கண்டுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.