உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு


உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 May 2019 9:30 PM GMT (Updated: 28 May 2019 8:40 PM GMT)

உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி, 

உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் ஜூன் 6–ந் தேதி முதல் 15–ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, போலந்து, ரஷியா, உஸ்பெகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, மெக்சிகோ அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தகுதி காணும். இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக பிரேந்திர லக்ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணி வீரர்கள் வருமாறு:–

கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணன் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், பிரேந்திர லக்ரா, சுரேந்தர் குமார், வருண்குமார், அமித் ரோஹிதாஸ், குரிந்தர் சிங், நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், சுமித், நீலகண்ட சர்மா, முன்களம்: மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ரமன்தீப் சிங், குர்சாஷிப்ஜித் சிங், சிம்ரன்ஜித் சிங்.


Next Story