ஹாக்கி

உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்தியா-ரஷியா அணிகள் இன்று மோதல் + "||" + The final round of the world hockey series: India-Russia teams today collide

உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்தியா-ரஷியா அணிகள் இன்று மோதல்

உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று: இந்தியா-ரஷியா அணிகள் இன்று மோதல்
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ரஷியா அணிகள் மோதுகின்றன.
புவனேசுவரம்,

2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, போலந்து, ரஷியா, உஸ்பெகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, மெக்சிகோ அணிகளும் இடம் பெற்றுள்ளன.


இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் அடுத்த பிரிவில் 2-வது, 3-வது இடம் பிடித்த அணிகளுடன் ஒரு ஆட்டத்தில் மோத வேண்டும், அதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த போட்டி தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தேர்வாகும்.

தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. காலை 8.45 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- அமெரிக்கா அணியும், மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போலந்து-உஸ்பெகிஸ்தான் அணியும், இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ரஷியா அணியும் மோதுகின்றன.

உலக தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ரஷியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. இந்த விஷயத்தில் கடந்த 3 வாரமாக கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டுள்ளோம். போட்டியின் கடைசி கட்டத்தில் தவறு செய்வதை தவிர்க்க வேண்டியது அவசியமானதாகும். கடைசி நிமிடங்களில் கோல் வாங்காமல் இருப்பதில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இந்த போட்டிக்கு நன்றாக தயாராகி இருக்கிறோம். முதலிடத்தை பிடிக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
2. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. சீனா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரிக்கிறது : இந்தியா அதே நிலையில் உள்ளது
சீனா- பாகிஸ்தான் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகின்றன. இந்தியா அதே நிலையில் உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
4. உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிப்பு
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
5. வெற்றி வரலாறு தொடருமா? - பாகிஸ்தான் அணியை இன்று சந்திக்கிறது, இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுடன் கோதாவில் இறங்குகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...