ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + World Hockey Series: Indian team qualify for semi-final

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
உலக ஆக்கி தொடரில், இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.
புவனேசுவரம்,

2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங் 3 கோலும், மன்தீப் சிங், வருண்குமார் தலா 2 கோலும், குர்சாகிப்ஜித் சிங், நீலகண்ட ஷர்மா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தென் ஆப்பிரிக்க அணி 6-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. இதேபிரிவில் நடந்த அமெரிக்கா-ஜப்பான் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ‘பி’ பிரிவில் அமெரிக்கா, ஜப்பான் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்றன. கோல் வித்தியாசம் அடிப்படையில் அமெரிக்க அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.தொடர்புடைய செய்திகள்

1. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய அணி அறிவிப்பு
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை; ரோகித் பற்றி விராட் கோலி பேட்டி
எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என ரோகித் சர்மா பற்றி விராட் கோலி பேட்டியளித்து உள்ளார்.
4. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இந்திய அணி இன்று அமெரிக்கா பயணம்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறது.
5. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.