ஹாக்கி

பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா + "||" + Women's World Hockey Series: Started with Success India

பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
பெண்கள் உலக ஆக்கி தொடரை, இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
ஹிரோஷிமா,

பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடம் பெறும் அணியுடன் ஒரு முறை மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.


இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது. இந்திய அணியில் ராணி ராம்பால், குர்ஜித் கவுர், ஜோதி சுனிதா குல்லு, லாம்ரெம்சியாமி தலா ஒரு கோல் அடித்தனர். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் பிஜியை எளிதில் வென்றது.

தொடர்புடைய செய்திகள்

1. அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு
வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதற்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே
புரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
3. புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வி
புரோ கபடி லீக் தொடரில் உ.பி.யோத்தா அணியிடம் ஜெய்ப்பூர் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
4. சர்வதேச ஆக்கி: இந்திய அணிகள் வெற்றி
சர்வதேச ஆக்கி போட்டியில் இந்திய அணிகள் வெற்றிபெற்றன.
5. புரோ கபடி லீக் போட்டி: மும்பையிடம் வீழ்ந்தது பாட்னா
புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.