ஹாக்கி

பெண்கள் உலக ஆக்கி தொடர்: இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி + "||" + Indian women's hockey team beat Japan 3-1 to win FIH Series Finals

பெண்கள் உலக ஆக்கி தொடர்: இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

பெண்கள் உலக ஆக்கி தொடர்:  இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஹிரோஷிமா,

பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் குர்ஜித் கவுர் (22 மற்றும் 37-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (31-வது நிமிடம்), கேப்டன் ராணி ராம்பால் (57-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பான் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. 

இன்று  நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின.  ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை ராணி ரம்பால் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலாக ஜப்பான 11-வது நிமிடத்தில் கோல் அடித்தது.

45-வது மற்றும் 60-வது நிமிடங்களில் குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என ஜப்பானை வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஏற்கனவே இந்தியா 2020 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றில் இந்திய அணி வென்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இறுதிப்போட்டியில் இந்தியா
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்து வருகிறது.
3. பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
பெண்கள் உலக ஆக்கி தொடரை, இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.