ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’ + "||" + World Series Series: Indian women's team champion

உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’

உலக ஆக்கி தொடர்: இந்திய பெண்கள் அணி ‘சாம்பியன்’
பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது.

ஹிரோஷிமா, 

பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிசுற்று போட்டி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்திய கேப்டன் ராணி ராம்பால் 3–வது நிமிடத்தில் கோல் அடித்தார். 11–வது நிமிடத்தில் ஜப்பானின் கனோன் மோரி பதில் கோல் திருப்பினார். ஆட்டம் நீண்ட நேரம் சமனாக நகர்ந்த நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை குர்ஜித் கவுர் 45–வது நிமிடத்தில் கோல் போட்டு அசத்தினார். 60–வது நிமிடத்தில் அவரே மேலும் ஒரு கோல் அடித்து, உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார்.

முடிவில் இந்திய அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடரின் சிறந்த வீராங்கனையாக ராணி தேர்வு செய்யப்பட்டார். அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் குர்ஜித் கவுர் (11 கோல்) முதலிடம் பிடித்தார்.

வாகை சூடிய இந்திய அணி 2020–ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டிக்கான இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.