நாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை


நாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை
x
தினத்தந்தி 26 Jun 2019 7:38 AM GMT (Updated: 26 Jun 2019 7:38 AM GMT)

தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை நாடு திரும்பியபோது தன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சி காண்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் எப்ஐஎச்எனும் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணியில் உள்ள 19 வயது வீராங்கனையான லால்ரெம்ஸியாமி-யின் தந்தை லால்தன்சங்கா ஸோடெ கடந்த வெள்ளியன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

மறுநாள் இந்தியா-சிலி அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டி இருந்தது. அதில் வென்றால்தான் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய அணி வீராங்கனை லால்ரெம்ஸியாமி, தன் தந்தையின் மரணம் அறிந்து இடிந்துபோனார்.

இருப்பினும் தாய் நாட்டின் வெற்றியை மனதில் கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்பதில்லை என கனத்த மனதோடு முடிவெடுத்தார். இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி நேற்று மிஸோரமில் உள்ள தனது கிராமத்துக்கு சென்றதும் தாயை கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதார்.

இது குறித்து லால்ரெம்ஸியாமி கூறியதாவது;-

விளையாட்டுக்கு சற்று முன்பு என் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது, ஆனால் நான் இன்னும் விளையாடினேன், நாங்கள் சாம்பியன்ஸ் ஆனோம். எனது தந்தை எங்கிருந்தாலும் எனது சாதனை குறித்து பெருமைப்படுவார் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

Next Story