ஹாக்கி

டோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிப்பு + "||" + Tokyo Olympics test event: Hockey India names 18-member women's team

டோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிப்பு
டோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான ஆக்கி பெண்கள் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி

ஆகஸ்ட் 17 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் சோதனை போட்டிக்கான 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி  அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானின் கிரோஷிமாவில் நடந்த எஃப்ஐஎச் மகளிர் தொடர் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணியுடன் இந்த அணி கிட்டத்தட்ட ஒத்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்நெத்தே இரண்டு மாற்றங்களைத் செய்து உள்ளார்.

அணியில் சுனிதா லக்ரா மற்றும் ஜோதி ஆகியோருக்கு பதிலாக ஷர்மிளா தேவி மற்றும் ரீனா கோகர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

காயம் காரணமாக கோகர் அணியில் சேர்த்துகொள்ளப்படாமல் இருந்தார்.  வெற்றிகரமாக குணமடைந்த பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஸ்ட்ரைக்கர் ராணி ராம்பால் கேப்டனாக இருப்பார். கோல்கீப்பர் சவிதா துணை கேப்டனாக இருப்பார்.