ஹாக்கி

முருகப்பா ஹாக்கி கோப்பை : ஆகஸ்ட் 29 முதல் தொடக்கம் + "||" + Murugappa Gold Cup Hockey to begin on August 29

முருகப்பா ஹாக்கி கோப்பை : ஆகஸ்ட் 29 முதல் தொடக்கம்

முருகப்பா ஹாக்கி கோப்பை : ஆகஸ்ட் 29 முதல் தொடக்கம்
93 வது அகில இந்திய முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
சென்னை,

அகில இந்திய எம்.சி.சி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக நட்பு ரீதியான  கண்காட்சிப்போட்டி ஒன்றை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் தி இந்து விளையாட முடிவு செய்துள்ளனர். கண்காட்சி போட்டியில் இந்திய  ஹாக்கி அணியின்  முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ்மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக விளையாடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய ரயில்வேக்கு எதிராக 4-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) நடப்பு சாம்பியனாக உள்ளது குறிப்பிடத்தக்கது.