ஹாக்கி

சர்வதேச ஆக்கி: இந்திய ஆண்கள் அணி தோல்வி + "||" + International hockey: Indian men's team loses

சர்வதேச ஆக்கி: இந்திய ஆண்கள் அணி தோல்வி

சர்வதேச ஆக்கி: இந்திய ஆண்கள் அணி தோல்வி
சர்வதேச ஆக்கி போட்டியில், இந்திய ஆண்கள் அணி தோல்வியடைந்தது.
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை துவம்சம் செய்த இந்திய அணி நேற்று தனது 2-வது லீக்கில் நியூசிலாந்தை சந்தித்தது. 2-வது நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆனால் பிற்பகுதியில் மீண்டெழுந்த நியூசிலாந்து 47 மற்றும் 60-வது நிமிடங்களில் கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்தது.


பெண்கள் பிரிவில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதில் ஒரு கட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் 59-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் கோல் அடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.