சர்வதேச ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி


சர்வதேச ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி
x
தினத்தந்தி 20 Aug 2019 9:45 PM GMT (Updated: 20 Aug 2019 9:42 PM GMT)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது.

டோக்கியோ, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் பந்தயம் என்ற பெயரில் சர்வதேச ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 4 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பானை எதிர்கொண்டது. இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 6-3 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 2-வது வெற்றியை சுவைத்தது. இந்திய அணியில் நீலகண்ட ஷர்மா 3-வது நிமிடத்திலும், நீலம் ஜெஸ் 7-வது நிமிடத்திலும், மன்தீப் சிங் 9-வது, 29-வது மற்றும் 30-வது நிமிடத்திலும் (ஹாட்ரிக்), குர்ஜந்த் சிங் 41-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு நடக்கும் இறுதி சுற்றில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பெண்கள் பிரிவில் தனது கடைசி லீக்கில் சீனாவுடன் டிரா (0-0) கண்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை (5 புள்ளி) பிடித்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Next Story