அகில இந்திய ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி


அகில இந்திய ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி
x
தினத்தந்தி 29 Aug 2019 11:45 PM GMT (Updated: 29 Aug 2019 11:45 PM GMT)

அகில இந்திய ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றிபெற்றது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய கடற்படை-தமிழ்நாடு அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. கடற்படை அணியில் அகிப் ரஹிம், குல்தீப், பழங்கப்பா தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியை சாய்த்தது. இன்றைய ஆட்டங்களில் ரெயில்வே-தமிழ்நாடு (பிற்பகல் 2.30 மணி), இந்திய விமானப்படை-பெங்களூரு (மாலை 4.15 மணி), மத்திய தலைமைசெயலகம்-கடற்படை (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன

Next Story