ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி + "||" + All India Hockey: Railway team wins

அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி: ரெயில்வே அணி வெற்றி
அகில இந்திய ஆக்கி போட்டியில், ரெயில்வே அணி வெற்றிபெற்றது.
சென்னை,

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தியது. ரெயில்வே அணியில் பர்மீத், அய்யப்பா, ஹர்சாஹிப் சிங் ஆகியோர் கோல் அடித்தனர். தமிழக அணியில் மாரீஸ்வரன், ஜோஷ்வா கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் இந்திய விமானப்படை அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை சாய்த்தது. சுக்தேவ் சிங் 59-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். மத்திய தலைமை செயலகம்-இந்திய கடற்படை அணிகள் மோதிய இன்னொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய விமானப்படை-பஞ்சாப் நேஷனல் வங்கி (பிற்பகல் 2.30 மணி), ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி (மாலை 4.15 மணி), ராணுவம்-இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி மீண்டும் ‘சாம்பியன்’
அகில இந்திய ஆக்கி போட்டியில், இந்தியன் ஆயில் அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
2. அகில இந்திய ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி
அகில இந்திய ஆக்கியின், இறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகள் மோத உள்ளன.
3. அகில இந்திய ஆக்கி: கடற்படை, ராணுவ அணிகள் அபாரம்
அகில இந்திய ஆக்கி போட்டியில் கடற்படை, ராணுவ அணிகள் அபார வெற்றிபெற்றன.
4. அகில இந்திய ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றி
அகில இந்திய ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி வெற்றிபெற்றது.