ஹாக்கி

அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி வெற்றி + "||" + All India Hocky Indian Oil team wins

அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி வெற்றி
அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
சென்னை,

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் நேஷனல் வங்கி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ரெயில்வே-பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ராணுவ அணியை வீழ்த்தியது. இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலகம் (பிற்பகல் 2.30 மணி), ராணுவம்-பெங்களூரு (மாலை 4.15 மணி), இந்திய கடற்படை-பஞ்சாப் சிந்து வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.