அகில இந்திய ஆக்கி: கடற்படை, ராணுவ அணிகள் அபாரம்


அகில இந்திய ஆக்கி: கடற்படை, ராணுவ அணிகள் அபாரம்
x
தினத்தந்தி 5 Sep 2019 12:02 AM GMT (Updated: 5 Sep 2019 12:03 AM GMT)

அகில இந்திய ஆக்கி போட்டியில் கடற்படை, ராணுவ அணிகள் அபார வெற்றிபெற்றன.

சென்னை,

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய கடற்படை 3-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை தோற்கடித்தது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்றைய லீக் ஆட்டங்களில் மத்திய தலைமை செயலகம் - பஞ்சாப் சிந்து வங்கி ( பிற்பகல் 2.30 மணி), பஞ்சாப் நேஷனல் வங்கி - இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story