அகில இந்திய ஆக்கி: மத்திய தலைமை செயலக அணி அரைஇறுதிக்கு தகுதி


அகில இந்திய ஆக்கி: மத்திய தலைமை செயலக அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 5 Sep 2019 11:51 PM GMT (Updated: 5 Sep 2019 11:51 PM GMT)

அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மத்திய தலைமை செயலக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் சிந்து வங்கி அணியை வீழ்த்தியது. ‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் நேஷனல் வங்கி-இந்தியன் ஆயில் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியன் ஆயில் 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. ‘பி’ பிரிவில் இந்திய கடற்படை அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடமும், மத்திய தலைமை செயலக அணி ஒரு வெற்றி, 3 டிராவுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியன் ஆயில்-மத்திய தலைமை செயலக அணியும் (மாலை 4 மணி), 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய கடற்படை-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணியும் மோதுகின்றன.

Next Story