ஹாக்கி

இந்திய ஆக்கி அணிகள் வெளிநாடு பயணம் + "||" + Indian Hockey teams travel abroad

இந்திய ஆக்கி அணிகள் வெளிநாடு பயணம்

இந்திய ஆக்கி அணிகள் வெளிநாடு பயணம்
இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
பெங்களூரு,

ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தயார் ஆகும் வகையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. ஆண்கள் ஆக்கி அணி வருகிற 26-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிகளுக்கு எதிராக மொத்தம் 5 போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய பெண்கள் ஆக்கி அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டி தொடர்களுக்கான இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணிகள் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டு சென்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...