பெண்கள் ஆக்கி இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’


பெண்கள் ஆக்கி இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 4 Oct 2019 10:45 PM GMT (Updated: 4 Oct 2019 10:43 PM GMT)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி மார்லோவில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அந்த நாட்டு அணியுடன் மீண்டும் மோதியது.

மார்லோவ், 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி மார்லோவில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் அந்த நாட்டு அணியுடன் மீண்டும் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்திய அணியில் நவ்ஜோத் கவுர் (8-வது நிமிடம்), குர்ஜித் கவுர் (48-வது நிமிடம்) கோல் அடித்தனர்.கடைசி கட்டத்தில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் டிரா கண்டது. ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.

Next Story