ஹாக்கி

சுல்தான் கோப்பை ஜூனியர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா + "||" + The Sultan Cup Junior Hockey Australia Pantatiyatu India

சுல்தான் கோப்பை ஜூனியர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா

சுல்தான் கோப்பை ஜூனியர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா
மலேசியாவில் நடந்து வரும் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டியில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா அணி.
ஜோஹர் பாரு, 

6 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பந்தாடியது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா 2 கோலும், தில்பிரீத் சிங், குர்சஹிப்ஜித் சிங், மன்தீப்சிங் மோர் தலா ஒரு கோலும் அடித்தனர். 4-வது லீக்கில் விளையாடி 3-வது வெற்றியை பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இந்திய அணி கடைசி லீக்கில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.