ஹாக்கி

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா + "||" + Sultan Cup hockey: India in the final

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா

சுல்தான் கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா
சுல்தான் கோப்பை ஆக்கியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றது.
ஜோஹர் பாரு,

9-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கடைசி லீக்கில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் ஷிலானந்த் லக்ரா, மன்தீப் மோர், ஷர்தா நந்த் திவாரி ஆகியோர் கோல் அடித்தனர். ஒரு கட்டத்தில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் அதன் பிறகு மீண்டு வந்து தோல்வியில் இருந்து தப்பியது.


லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 10 புள்ளியுடன் 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்துடன் மீண்டும் மோதுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி 425 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.
2. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி நிதான ஆட்டம்: வசவதா சதம் அடித்தார்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது. அந்த அணி வீரர் அர்பித் வசவதா சதம் அடித்தார்.
3. அகில இந்திய கூடைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி
அகில இந்திய கூடைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி, கோவாவுக்கு எதிரான 2-வது அரைஇறுதியில் தோற்ற போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் டொமினிக் திம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம், அலெக்சாண்டர் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.